கொரோனா பரவலைத் தடுக்க ஆயுர்வேதம், ஹோமோயோபதி மருந்துகளைப் பயன்படுத்த மகாராஷ்டிரா முடிவு...

0 4334
ஆர்சனிகம் ஆல்பம் 30

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு மருந்தாக ஆர்சனிகம் ஆல்பம் 30 (Arsenicum Album 30) என்ற ஹோமியோபதி மருந்தைப் பயன்படுத்த மகாராஷ்டிரா முடிவு செய்துள்ளது. இத்துடன் யுனானி, ஆயுர்வேதம் மருந்துகளான அகஸ்திய ஹரிடகி, ஆயுஷ் 634, நல்லெண்ணெய் ஆகியவற்றை கொரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தவும் மகாராஷ்டிரா அரசு முடிவு செய்திருக்கிறது. 

image

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 3,700 - க்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் இறந்திருக்கிறார்கள். இதனால் கொரோனா நோய் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருந்துக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. கிராமப் புறங்களில் வசிக்கும் 55 வயதுக்கும் மேற்பட்டோரைக் கண்டறிந்து  ஆர்சனிகம் ஆல்பம் 30 மருந்தை விநியோகிக்கத் தொடங்கியிருக்கிறது மகாராஷ்டிரா அரசு. 

மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆர்சனிகம் ஆல்பம் 30 மருந்தை சோதனை அடிப்படையில் டெல்லி, மும்மை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தது. ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனமும், "ஹோமியோபதி மருந்துகள் வெகுஜன நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்" என்று தெரிவித்திருக்கிறது. 

ஆனால், இதுவரை  ஆர்சனிகம் ஆல்பம் 30 கோரோனோ நோயைத் தடுக்கும் என்று ஆதாரமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த மருந்துகள் பொதுவாக சுவாசப் பிரச்னைக்கு அளிக்கப்படும் மருந்துகளாகும். பரிசோதிக்கப்படாத மருந்துகளை கொரோனாவுக்குப் பயன்படுத்திடுவது பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்ற கருத்தும் மருத்துவர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments